இன்று வியாழக்கிழமை 18ம் திகதி, எமரைட்ஸ் (Emirates) விமானசேவைகள் எயார்பஸ் A380 பிரம்மாண்ட விமானங்கள் 36 இனைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினைச் பிரான்ஸ் செய்துள்ளன. இந்த ஒப்பந்தமானது 13 பில்லியன் (13000 மில்லியன்) யூரோக்கள் பெறுமதியானவை. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை மகிழ்ச்சியுடன் எமரைட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கான முதல் வநியோகமானது 2020 ஆரம்பிக்கும் என எயார்பஸ் நிறுவனம் தெரிவித்தள்ளது. எமரைட்ஸ் நிறுவனத்திடம் ஏற்கனவே 101, A380 விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த நவீன தொழில்நுட்பம் வாய்த எயார்பஸ் A380 விமானங்களிற்கு மேலும் பல வியாபார ஒப்பந்தங்கள் வாய்த்து, 2030 இலும் இந்த விமானங்கள் தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படவேண்டும் என நான் விரும்புகின்றேன்" என எமரைட் நிறுவனத்தின் உரிமையாளர் ஷேக் அஹ்மத் பென் சையத் அல் மக்டூம் தெரிவித்துள்ளார்.
இந்த எயார்பஸ் A380 விமானங்கள், 853 இருக்கைகளைக் கொண்டவை. 2017 ஆம் ஆண்டில் எயார்பஸ் A380 விமானம் தனது பத்தாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமரைட்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய கொள்வனவு ஒப்பந்தம், பிரான்சின் பொருளாதாரத்தில் பெரும் உற்சாகத்தை வழங்கி உள்ளது.
பிரான்சின் புதிய உற்சாகம்!!எயார் எமரைட்ஸ்
Reviewed by Beauty tips.tk
on
January 19, 2018
Rating:

No comments: