நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் கூட. அண்மையில் கார்த்தியின் ரசிகர் ஜீவன்குமார், (27வயது) என்பவர் தாம்பரம் இரும்புலியூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று மாத காலம் மட்டுமே ஆகிறது. ஜீவன்குமார் திருவண்ணாமலை கார்த்தி ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் ஆவர். இந்நிலையில், கார்த்தி நேற்று நேரில் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழத்தொடங்கினார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
ரசிகனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுத கார்த்தி
Reviewed by Beauty tips.tk
on
December 26, 2017
Rating:
No comments: