கடும் பனிப்பொழிவு - பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை - போக்குவரத்தத் தடை


இன்று பிரான்சில் மிகக் கடுமையாகப் பொழிந்து வரும் பனியினால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின் தடைக்கு உள்ளாகி உள்ளன. Bouches-du-Rhône,Var, Haute-Corse  ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் பனிப் பொழிவிற்கான கடும் எச்சரிக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளன.uy

இதில் வார் (Var) பகுதியில் மட்டும் 3000 வீடுகள் மின் தடைக்கு உள்ளாகி உள்ளன. இந்தப் பகுதியே பனிப்பொழிவினால் மிகவும் பாதிப்படைந்துள்ள பகுதியாகும். இதனைத் தொடர்ந்து கோர்ஸ் தீவுப் பகுதியில் 3500 வீடுகள் மின்தடைக்கு உள்ளாகி உள்ளன.


இது தவிர நெடுஞ்சாலைகள் A8, A50, A52 ஆகியவற்றில் பெரும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது. Aix-en-Provence, Aubagne ஆகிய பகுதிகளின் மக்களை, அத்தியாவசியத் தேவைகளிற்காக மட்டுமே போக்குவரத்தில் ஈடுபடுமாறும், பெருமளவில் போக்குவரத்தினைத் தவிர்க்குமாறும் மாவட்ட ஆணையம் அறிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவு - பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை - போக்குவரத்தத் தடை கடும் பனிப்பொழிவு - பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை - போக்குவரத்தத் தடை Reviewed by Beauty tips.tk on December 02, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.