7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்த காமக் கொடூரன் உல்லாச வாழ்க்கைக்காக தனது தாயை கொன்றான்: நகை, பணத்துடன் ஓட்டம்

இந்நிலையில், நேற்று காலை சேகர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சரளாவும், தஷ்வந்த் மட்டும் இருந்தனர். மாலை 3.30 மணியளவில் சேகர் சரளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் சரளா போனை எடுக்கவில்லை. இதனால் சேகர் தஷ்வந்தை தொடர்பு கொண்டு உள்ளார். போனை எடுத்து பேசிய தஷ்வந்த், ‘‘நான் வெளியில இருக்கேன். 10 நிமிசத்தில வீட்டிற்கு போய் கூப்பிடுறன்’’ என்று கூறியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் தஷ்வந்த் தொடர்பு கொள்ளாததால், சேகர் மீண்டும் தஷ்வந்தை தொடர்பு கொண்டார். அப்போது தஷ்வந்த் போன் ‘சுவிட்ச் ஆப்’ என வந்தது. இதனால், மீண்டும் சரளாவை சேகர் தொடர்பு கொண்டார். ரிங் மட்டும் வெகு நேரமாக அடித்தது. யாரும் போனை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த சேகர் அருகில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்ற பார்க்க சொல்லியுள்ளார். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் சரளா தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தாலி செயின் உட்பட 25 சவரன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த பணம் மாயமானது தெரிந்தது. இதனால் உல்லாச வாழ்க்கைக்கு பணம் கேட்டு தஷ்வந்த் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று உறவினர்கள் நினைத்து காவல் கட்டுப்பாட்டை அறைக்கு தகவல் கொடுத்தனர்.
குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள தஷ்வந்தை பிடிக்க போரூர் உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உல்லாச வாழ்க்கைக்காக தாயை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற தஷ்வந்த், ஏற்கனவே போரூரில் அவர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். இந்த வழக்கில் அவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும் அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பில் இருக்க பிடிக்காமல் குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். குன்றத்தூரில் குடிவந்து ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை உலுக்கிய சிறுமியின் கொலை
முகலிவாக்கம் மதனந்தபுரம், மாதா நகரில் உள்ள தஷ்வந்த் பெற்றோருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசித்தவர் பாபு. இவரது மனைவி தேவி இவர்களுக்கு ஹாசினி (6) என்ற மகள் இருந்தார். இந்த குழந்தை கடந்த பிப்ரவரி 7ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அவளை தஷ்வந்த் கடத்தி சென்று வீட்டில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்தார். விளையாட சென்ற குழந்தையை காணவில்லை என்று அவளது பெற்றோர் பல இடங்களில் தேடினர். இதையறிந்த தஷ்வந்த் ஒரு டிராவல் பேக்கில் குழந்தை ஹாசினியை கட்டி, புறவழி சாலையில் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு வீடு திரும்பினார்.
அதேநேரத்தில், குழந்தை காணாமல் போன விவகாரத்தில், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறிவந்தனர். போலீசார் குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, தஷ்வந்த் ஒரு பேக்கை எடுத்துச் செல்வதும், பின்னர் வெறும் கையுடன் வருவதும் இருந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் குழந்தையை கொலை செய்து, டிராவல் பேக்கில் அடைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் அதை அவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரிந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து, கொலையாளிக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். பின்னர், மார்ச் 20ம் தேதி அவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் மீதான குண்டாஸை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து செப்.13ம் தேதி காம கொடூரன் சுதந்திரமாக வெளியே உலா வர ஆரம்பித்தார். தற்போது அவர் பெற்ற தாயையே கொலை செய்து விட்டு பணம், நகையுடன் தப்பியுள்ளார். அவரால் மேலும் பல பெண்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்குள் போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்த காமக் கொடூரன் உல்லாச வாழ்க்கைக்காக தனது தாயை கொன்றான்: நகை, பணத்துடன் ஓட்டம்
Reviewed by Beauty tips.tk
on
December 03, 2017
Rating:

No comments: