சனிப்பெயர்ச்சி 2017-2020 அமோக யோகம் எந்த ராசிகாரர்களுக்கு தெரியுமா?

வெளிநாட்டு யோகம், வேலைவாய்ப்பு போன்றவையெல்லாம் ராசிக்கு ஏற்ற தசாபுத்தியை பொறுத்தே பலன்கள் மாறுபடுவதை பார்க்கலாம்.டிசம்பர் 19 மார்கழி 4 செவ்வாய் அன்று காலை 9.28 மணிக்கு விருச்சக ராசியிலிருந்து தனுசுராசிக்கு சனிப்பெயர்ச்சி அடைக்கிறது. 12 ராசிகாரர்களுக்கும் நன்மை தீமைகள் கிடைத்தாலும் ஒரு சில ராசிகாரர்களின் வெற்றி, வெளிநாட்டு யோகம், வேலைவாய்ப்பு போன்றவையெல்லாம் ராசிக்கு ஏற்ற தசாபுத்தியை பொறுத்தே பலன்கள் மாறுபடுவதை பார்க்கலாம்.


மேஷம் ராசிகாரர்கள்சனி பகவான் 9வது இடமான பாக்யதானத்திற்கு செல்லும். இதுவரை செவ்வாய் வீட்டில் அஷ்டமத்தில் இருந்துள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் நாட்கள் நல்லதாக இருக்கும்.மாணவர்களுக்கு 9ம் இடம் சனியால் உயர்கல்வி, வெளிநாட்டு கல்வி கிடைக்கும். 3, 6, 11 ஆகிய இடத்தை சனிபகவானின் பார்வை செல்லும். சனிக்கிழமைகளில் செய்யும் காரியங்களால் லாப ஸ்தானம் கிடைக்கும். சுயவேலை, குடும்பத்தில் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை ஆகியவை கிட்டும். அரசியலில் மாற்றங்கள் நடக்கும். பாராட்டுகள் குவியும்.




மிதுன ராசிகாரர்கள்ரோக ஸ்தானத்திலிருந்து 7வது இடம் கண்டகச்சனியாக இடம் பெயர்கிறார் சனிபகவான். ஜென்ம ராசியை பார்க்கிறார். இதனால் 3வது பார்வை பாக்யஸ்தானத்தை பார்பதால் உடல் நலன் பெறும், நல்ல பெயர், புகழ் வந்து சேரும். பிரச்சனைகள் விலகும், 7ல் மரணம் என்பார்கள் ஆனால் 6 குடையவரின் திசை வந்தால் மட்டும் மரணம். இதனால் கவலை வேண்டாம். வாழ்க்கையில் கணவன் மனைவி ஆலோசித்து செயல்படுங்கள், கருத்து வேறுபாடுகள் நடக்கலாம். வெளிநாட்டு பயணம், கல்வி முயற்சியில் மாற்றம், தொழில் வளர்ச்சி இவையெல்லாம்கைகூடிவரும்.


கடக ராசிகார்கள்5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு செல்லும் சனிபகவான் நன்மைகளை வாரி வழங்குவார். ஜென்ம ராகுவால் நன்மை கிடைக்கும். எதிரிகள் விலகி ஓடுவார்கள். நோய் நீங்கும். வெற்றிகனிகளை பறிப்பீர்கள். புதிய வீடு வாங்கும் எண்ணம் நிறைவெறும். 3 வது இடத்திலிருந்து 8வது இடத்தை பார்ப்பதால் வாகனத்துல் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். 7வது இடம் 12 வது ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் வெளிநாட்டு யோகம் வரலாம். உறக்கம் கெடும், சுகம் கெடும் வேலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.



சிம்ம ராசிக்காரர்கள்சனிபகவான் 4 வது இடம் அர்த்தாஸ்டம சனியாக இருந்து 5 வது இடத்தை பார்க்கிறார். சிரமங்கள், பிரச்சனைகள் தீரும். நோய்கள் குணமாகும். பகை நண்பனாக மாறும். புதிதாக வீடு, வாகனம் வாங்க ஏற்படும். 2 வது இடத்தை தனஸ்தானம் பார்க்கும் சனிபகவான் மூத்தவர்களின் ஆலோசனை நல்லது. பணவரவு, செலவுகளும் ஏற்படும். சிக்கனம் அவசியமானதாகும்.


துலாம் ராசிக்காரர்கள்ஏழரை சனியிலிருந்து விடுபடும் துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் இன்பம் தான். அதிர்ஷ்டம் கிடைக்கும். படிப்பிற்காக ஊர்விட்டு ஊர் மாறலாம். 9வது இடத்தை பார்பதால் வெளிநாட்டு பயணம் ஏற்படும். குழந்தைகளுக்கு வெற்றி கிடைக்கும். வேலைகள், உயர்படிப்புகள் கிடைக்கும்.


மகர ராசிகாரர்கள் 12 வது இடத்தில் இருக்கும் சனிபகவான் விரைய சனியாக அமைகிறது. இதனால் ஏழரை சனியாக அமைவதாலும், அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதாலும் ஏழரை அரம்பிக்கிறது. ஏழரையாக இருந்தாலும் சனிபகவானால் நல்லதே நடக்கும். நோய், மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பிரச்சனைகள் வராமல் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாட்டு யோகம் கிடைக்கும்.


கும்ப ராசிக்காரர்கள்கும்ப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். பல பிரச்சினைகளை சந்தித்த நீங்கள், இனி எல்லாம் லாபமாகவே இருக்கும்.மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். கும்ப ராசிக்கு சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். அட்டமஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.



மீன ராசிக்காரருக்கு  உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். ஆனால் ஆதரவாக அக்கறையாக இருப்பார். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை. சில மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள் உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி 2017-2020 அமோக யோகம் எந்த ராசிகாரர்களுக்கு தெரியுமா? சனிப்பெயர்ச்சி 2017-2020 அமோக யோகம் எந்த ராசிகாரர்களுக்கு தெரியுமா? Reviewed by Beauty tips.tk on December 19, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.