தமிழ் நாட்டில் அடுத்து முதல்வர் அரியாசணத்தை பிடிக்கப்போவது யார் என பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. சிலர் ரஜினி, கமல், விஜய் என சினிமா நடிகர்கள் மீதான எதிர்ப்பார்ப்பும் குறையவில்லை.
ஏற்கனவே கமல்ஹாசன், ரஜினி போன்றோர் வருவோம் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில் சினிமாத்துறையினரும் தங்களுடைய கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இயக்குனர் அமீர் தமிழகத்தில் இப்போதைய நிலைக்கு தகுதியான தலைவர் கமல்ஹாசன் கிடையாது. ட்விட்டரில் ஆளும் கட்சியை விமர்சிக்க மட்டுமே நேரம் சரியாக உள்ளது.மக்கள் பிரச்சனை இரண்டாவது தான் என அவர் கூறினார். மேலும் விஜய்க்கு நல்ல மாஸ் இருக்கிறது. அவருடைய படங்களின் வெற்றியை பார்க்கும் போது இன்னும் கொஞ்சம் காலம் பொறுமையாக காத்திருப்போம் என கூறியுள்ளார்.
கமல் ஹாசனுக்கு தகுதியில்லை, விஜய்க்கு தான் இருக்கு – பிரபல இயக்குனர் ஓபன் டாக்
Reviewed by Beauty tips.tk
on
November 27, 2017
Rating:
No comments: