சிக்கினார் கொழும்பில் பிரபலத்தின் இளம் மனைவி!!


தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவியெருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும் அந்த காலப்பகுதியில் வங்கியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் இன்று காலை தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.


இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான 32 வயதுடைய ஹசினி ரத்நாயக்க என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிக்கினார் கொழும்பில் பிரபலத்தின் இளம் மனைவி!! சிக்கினார் கொழும்பில் பிரபலத்தின் இளம் மனைவி!! Reviewed by Beauty tips.tk on January 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.