குளிர் காலத்தில் உங்களுடைய சருமம் கறுக்கிறதா கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா? இதை தடுப்பதற்கு இதோ சூப்பர் டிப்ஸ்….
குளிர் காலத்தில் சருமம். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான்.
வெந்நீர்
குளிர்காலத்தில் இதமாக சுடச் சுட நீரில் குளிப்பது எல்லாரும் செய்வது. ஆனால் அப்படி குளித்தால் உடல் கருத்துப் போகும். இது நல்லதல்ல. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதுதான் உடல் கருப்பாகாமல் தடுக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் உங்கள் சருமம் குளிரினால் வாடிப் போகாது.
தேனும் பாலும்
பால் 1 ஸ்பூன் எடுத்து அதே அளவு தேன் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேயுங்கள். காய்ந்தபின் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் ஓரிரு நாட்களில் பழைய நிறம் பெறும்.
முல்தானிமட்டி
முல்தானி மட்டி சருமத்தை வெலள்ளையாக்கும். ஆனால் அதனை நேரடியாக பயன்படுத்தினால், சருமம் மேலும் வறட்சியாகும். ஆகவே முல்தானி மட்டியுடன் சிறிது பால் மற்றும் பாலாடை கலந்து பயன்படுத்துங்கள்.
பப்பாளி மாஸ்க்
குளிர்காலத்தில் சருமம் , கருப்பாவதையும் வறட்சியடையாமலும் தடுக்கும் பழம் பப்பாளிதான். பப்பாளியை சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது கருமையை போக்கி சருமத்தை வெள்ளையாக்கும்.
குளிர் காலத்தில் உங்களுடைய சருமம் கறுக்கிறதா கருத்துப் போவதற்கு காரணம் என்ன தெரியுமா? இதை தடுப்பதற்கு இதோ சூப்பர் டிப்ஸ்….
Reviewed by Beauty tips.tk
on
January 20, 2018
Rating:
No comments: