நுரையீரல் போன்ற உறுப்புகளில் பாக்டீரியா தொற்று, சளி அதிகம் தேங்கி இருத்தல், தொண்டை அழற்சிகள் இருந்தாலும் இருமல் உண்டாகும். இருமல், சளி உண்டாகும் போது உடலில் கண் எரிச்சல், தலைவலி போன்றவையும் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு சிறந்த இயற்க்கை வைத்தியம் இருக்கிறது. அது தான் வெங்காயம், பூண்டு ஜூஸ்
வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கும் சல்பர் காம்பவுண்டுகள் சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக். இவை வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து வலுவாக சண்டையிடும். இதனால் தான் உணவில் வெங்காயத்தை ஒதுக்க வேண்டாம் என கூறுகிறார்கள்.
வெங்காயம்,பூண்டு
தேவையான பொருட்கள்! இரண்டு கப் நீர் (500 மில்லி அளவு) மீடியம் அளவிலான வெங்காயத்தில் பாதி. இரண்டு பூண்டு பல் இரண்டு கப் நீரை கொதிக்க வைக்கவும் (மீடியமான சூட்டில்). வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நீர் கொதித்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டை அதில் சேர்க்கவும். சூட்டின் அளவை குறைத்துக் கொண்டு (5 நிமிடம் வேக வையுங்கள்) பிறகு அறையின் தட்பவெப்ப நிலையில் ஆற வையுங்கள். ஆறிய பிறகு குடிக்கவும். பாதி கப் அளவு குடித்தால் போதுமானது. குடிக்கும் அளவு சூடு இருக்கும் படியான நிலையில் பருகவும். இருமல் ஏற்படும் முதல் நிலையிலேயே நீங்கள் இதை குடிக்கலாம். ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு முறை குடித்து வரலாம். இருமலின் அளவை சார்ந்து நீங்கள் உட்கொண்டால் போதுமானது.
உங்க உடலில் சளி தேங்கியுள்ளதா?அதை அகற்ற பூண்டை எப்படி சாப்பிட வேண்டும்?
Reviewed by Beauty tips.tk
on
January 23, 2018
Rating:
Reviewed by Beauty tips.tk
on
January 23, 2018
Rating:

No comments: