COPY CODE SNIPPET
COPY CODE SNIPPET வெண்புள்ளிகளும் கரும்புள்ளிகளைப் போல மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். வெண்புள்ளிகள் சருமங்களில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் அடைப்புகள் ஏற்படும். வெண்புள்ளிகளை நீக்குவது சற்று கடினமானது. இங்கு அந்த அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்.
ஆவிப்பிடித்தல்
ஆவிபிடிப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். அதற்கு ஆவி பிடித்த பின், சுத்தமான துணியால் சருமத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சி அடையாமல் மென்மையாக இருக்கும்.
சர்க்கரை
சர்க்கரையை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவை முழுமையாக வெளியேறும்.
பேக்கிங் சோடா
COPY CODE SNIPPET
பேக்கிங் சோடாவை நீரில் போட்டு பேஸ்ட் செய்து, வெண்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின் தவறாமல் டோனரைப் பயன்படுத்துங்கள்.
பட்டை
பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெண்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் போக்கும்.
உங்கள் மூக்கு கன்னங்களில் அசிங்கமான வெண்புள்ளிகளா?அதை தடுப்பதற்கு இதோ சுப்பர் ரிப்ஸ்!!
Reviewed by Beauty tips.tk
on
January 22, 2018
Rating:

No comments: