உங்கள் முழங்கால் , முழங்கையில் கருப்பாக உள்ளதா?? அதை தடுப்பதற்கு இதோ சில டிப்ஸ்.




உடலில்  கருமையாக இருக்கும் பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் தான். முழங்கால்களில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி அவ்விடமானது கருமையாகவே இருக்கும். அதேப்போன்று முழங்கையை அதிகம் ஊன்றுவதாலும், வெயிலில் அதிகம் திரிவதாலும், முழங்கைகளும் கருமையாக இருக்கும்.

மஞ்சள், தேன் , பால்



மஞ்சள் தூளில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை கருமையாக உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் அவ்விடத்தை 2 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கடலை மாவு , எலுமிச்சை

கடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி  மசாஜ் செய்து, உலர வைத்து, கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பளபளப்பாகவும் வெள்ளையாகவும் வரும்.

வினிகர், தயிர்

வினிகர் மற்றும் தயிரை ஒன்றாக ஒரு பௌலில் கலந்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி நன்கு உலர வைத்து, பின் அதனை இடத்தில் சிறிது நீர் தெளித்து 2 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கற்றாழை ஜெல்

வீட்டில் உள்ள கற்றாழை செடியின் ஒரு இலையை பறித்து, அதில் உள்ள ஜெல்லை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், கருமை மறைய ஆரம்பிக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கருமை மறையும்.



உங்கள் முழங்கால் , முழங்கையில் கருப்பாக உள்ளதா?? அதை தடுப்பதற்கு இதோ சில டிப்ஸ். உங்கள் முழங்கால் , முழங்கையில் கருப்பாக உள்ளதா?? அதை தடுப்பதற்கு இதோ சில டிப்ஸ். Reviewed by Beauty tips.tk on January 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.