தமிழ் சினிமாவில் கடந்த 14 ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 2017ஆம் வருடம் அவருக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்தது. அதிலும் வருட இறுதியில் அவர் நடித்திருந்த அறம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
தன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியும் 2018ஆம் ஆண்டில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் எனவும் ஒரு கடிதம் எழுதியுள்ளார் நயன்தாரா.
அதில்,… என்னுடைய இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய என் ரசிகர்களுக்கு நன்றி. இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகவும் நலமுடன் அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களால் நான் எப்போதும் அன்பானவளாக ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எல்லையற்ற அன்பு உண்மையில் இருப்பதை நான் உங்கள் மூலம் தான் உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையை அழகாக மாற்றியதற்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த அன்பு தான் என்னை மீண்டும் மீண்டும் அறம் போன்ற படங்களில் நடிக்க தூண்டுகிறது. அறம் படத்தினை வெற்றிபெற வைத்த தொலைகாட்சி, சோசியல் மீடியா மற்றும் சினிமா விமர்சகர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களால் தான் நான் தற்போது இங்கு நிற்கிறேன். உங்களது உள்ளத்தில் எனக்கும் சிறிது இடம் கொடுத்ததற்கு நன்றி. எனக் கூறி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் நயன்தாரா.
தன் ரசிகர்களுக்கு நயன்தாராஎழுதிய உருக்கமான கடிதம்
Reviewed by Beauty tips.tk
on
January 03, 2018
Rating:
No comments: