வழமை போல் இந்த வருடமும், பிரான்சில் வைரஸ் காய்ச்சல் தடிமன் தொற்று நோய் (GRIPPE) மிக வேகமாகப் பரவி வருகின்றது. இது தொற்று நோய் என்று அறிவிக்கக் கூடிய காரணியான, ஒரு இலட்சம் பேரிற்கு 175 பேர் நோய்வாய்யப்படல் வேண்டும் என்ற இலக்கை, இந்த வருடம் மிக அதிகமாகவே தாண்டி உள்ளது இந்த நோய்.
பிரான்சில் சராசரியாக, ஒரு வருடத்திற்கு 2.5 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்டுகின்றனர்.
வருடா வருடம் இந்த வைரஸ் காய்ச்சலினால் 4000 இலிருந்து 6000 சாவுகள் பிரான்சில் ஏற்படுகின்றன. இதில் மிகவும் பெரும்பான்மையாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.
இந்தக் காய்ச்சல் வைரஸ் கிருமியானது, ஒருவரின் உடலில் 5 நிமிடம் முதல் பல நாட்கள் வாழக்கூடியவை. இவை தோற் பகுதிகளிலும், உடலின் உள்ளுறுப்புகளிலும் தங்கித் தாக்ககக் கூடியவை.
கடந்த 2016-2017 இற்குள் 5.4 மில்லியன் மக்கள் இந்த வைரஸ் காய்ச்சலிற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பிரான்ஸ்சில் தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்கள்!!!!
Reviewed by Beauty tips.tk
on
January 11, 2018
Rating:

No comments: