பரிசின் பஸ்தி (Bastille) பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு இளைஞனைக் குத்திக் கொன்ற, விசாரணையில் ஐந்து பதின்ம வயதினர் (adolescents) இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனிற்கும் 15 வயது மட்டுமே!
இது ஒரு குழு மோதலில் நடைபெற்ற படுகொலையாகும். கைது செய்யப்பட்ட ஐவரும் கொல்லப்பட்ட இளைஞனின் அணியின் எதிரணியினராவார்கள்.
பரிஸ் பதினொன்றின் குழுவொன்றிற்கும், பரிஸ் இருபதின் குழுவொன்றிற்கும், சனிக்கிழமை இரவு, 19h30 மணிக்கும், 20h00 மணிக்கும் இடையில், பரிஸ் பதினொன்றில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்தக் குழு மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் கொல்லப்பட் இளைஞனிற்கு, 30 சென்றிமீறறர் நீளமான கத்தியால் பல குத்துக்கள் குத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பதின்மவயதினர் ஐவர் கைது-இளைஞன் படுகொலை !!!
Reviewed by Beauty tips.tk
on
January 15, 2018
Rating:
No comments: