சித்தூர் அருகே திருமணம் முடிந்த முதல் நாளே பெண்ணை பிளேடால் கிழித்து , அடித்து உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், கங்காதரநெல்லூரை சேர்ந்தவர் சைலஜா. எம்பிபிஎஸ் படித்துள்ளார். இவருக்கும் வி.கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வரும் மேதரங்கபல்லியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று காலை காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்றிரவு பெண் வீட்டில் வழக்கமான சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து முதலிரவு அறைக்குள் சைலஜா சென்றார். கணவர் ராஜேஷ் உள்ளே இருந்துள்ளார். சில நிமிடங்களில் பதற்றத்துடன் சைலஜா வெளியே ஓடிவந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
மீண்டும் சிறிது நேரத்தில் சைலஜா ரத்தக்காயத்துடன் வெளியே வந்து மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்ன நடந்தது என அறியாமல் குழம்பினர். இதையடுத்து உடனடியாக புதுப்பெண் சைலஜாவை சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சைலஜா கூறியதாக உறவினர்கள் தெரிவித்ததாவது: அறைக்குள் சென்றபோது திடீரென ராஜேஷ், சைலாஜாவின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். பின்னர் பிளேடால் சரமாரி வெட்டியுள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றனர். இதுகுறித்து சைலஜாவின் பெற்றோர் ஜி.டி.நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ராஜேஷை ஒப்படைத்தனர். ரூ.60 லட்சம் வரை செலவு செய்து திருமணம் நடந்த நிலையில் தனது மகள் வாழ்க்கையை சீரழித்த ராஜேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ெதாடர்ந்து போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சித்தூர் அருகே திருமணம் முடிந்த முதல் நாளே பெண்ணை பிளேடால் கிழித்து , அடித்து உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
Reviewed by Beauty tips.tk
on
December 04, 2017
Rating:
No comments: