வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்…



 சிலருக்கு முகத்தின் கன்னம், நெற்றி போன்ற பகுதிகளில் மட்டும்  நல்ல நிறத்திலும், வாய், தாடை போன்ற பகுதிகலில் கருமையாகவும் இருக்கும். இதனால் முகத்தின் அழகே அசிங்கமாக காட்சியளிக்கும். ஆகவே பலர் இதனை மறைப்பதற்கு பல  மேக்கப்புகளைப் போடுவார்கள்.

 இப்படிப்பட்ட பிரச்சனை    திர்ப்பதற்கு உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கடலை மாவு & பால்
கடலை மாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் முழுமையாக நீக்கப்பட்டு, சருமப் பொலிவு அதிகரிக்கும்.


style="margin-left: 1em; margin-right: 1em;">

கற்றாழை ஜெல்
தினமும் கற்றாழை ஜெல்லை வாய் மற்றும் தாடைப் பகுதியில் தடவி வந்தால், அப்பகுதிகளில் போதிய ஈரப்பசை கிடைப்பதோடு, கற்றாழையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் விரைவில் கருமை அகலும். கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ, இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

வைட்டமின் ஈ ஆயில்
வைட்டமின் ஈ சருமத்திற்கு போதிய ஈரப்பசை வழங்கி, சரும கருமையைப் போக்கும். அதற்கு தினமும் இரவில் வைட்டமின் ஈ நிறைந்த ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் கழுவுங்கள். இப்படி தினமும் செய்ய, விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

style="margin-left: 1em; margin-right: 1em;">
 மஞ்சள்
மஞ்சளை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கருமைக்கு காரணமானதை வேரோடு நீக்கிவிடும்.















வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்… வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்… Reviewed by Beauty tips.tk on December 04, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.