பொதுவாக கோடை வெயிலால் பலர் கருப்பாகி இருப்பார்கள். இப்படி வெயிலினால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க சிறந்த ரிப்ஸ்
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கருமையாக இருக்கும் சருமத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முக்கியமாக எலுமிச்சை சாறு பயன்படுத்திய பின், இறுதியில் தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள். இதனால் அதில் உள்ள சிட்ரிக் அமிலத்தால் ஏற்படும் கடுமையான வறட்சியைத் தடுக்கலாம்.
கடலை மாவு,
மஞ்சள் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் பாலுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதன் மூலமும் சரும கருமை அகலும்.
எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு
சாறு எலுமிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த செயலால் சரும கருமை வேகமாக அகலும்.
உருளைக்கிழங்கு
தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள நீங்கா கருமையும்
எளிதில் நீங்கிவிடும்.
மைசூர் பருப்பு
, தக்காளி மற்றும் கற்றாழை 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தக்காளி பேஸ்ட் சேர்த்து கலந்து, கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கருப்பா இருக்கும் உங்க சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...
Reviewed by Beauty tips.tk
on
December 26, 2017
Rating:
No comments: