விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படத்திற்கு `விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், இளமை தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண் அஜித் உடல் எடையையும் குறைத்து உடற்கட்டுடன் இருக்கிறாராம்.
கிராமத்து பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அனுஷ்கா ஏற்கனவே அஜித்தின் `என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரியில் தொடங்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை உட்பட தமிழிகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா
Reviewed by Beauty tips.tk
on
December 01, 2017
Rating:

No comments: