பெருந்துறை: மழையின் நனைந்து நடுக்கத்துடன் வந்த 70 வயது மிளகாய் வியாபாரியை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுதொடர்பாக கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சின்னமடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (70). மிளகாய் வியாபாரி. இவர், தனது மகள், மருமகன் ஆகியோருடன் சின்னமடத்துப்பாளைத்தில் வசித்து வந்தார். கடந்த நவ.30 தேதி மதியம் முதல் சாமிநாதனை காணவில்லை. மறுநாள் 1 ம் தேதி காலை அவரைத்தேடியபோது, பெருந்துறை சிப்காட், ஓடைக்காட்டூர், மலையாண்டி காட்டுப்பகுதியில் பிணமாகக்கிடந்தது தெரியவந்தது.
பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில், சாமிநாதனின் மொபெட் நின்றது. இதனால், இவரது மகள் மாலதி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் அணிந்திருந்த மூன்று தங்க மோதிரங்கள், ரூ.540 பணம் ஆகியவை அப்படியே இருந்ததும், உடலில் வெளிப்படையான காயங்கள் ஏதும் இல்லாததும் தெரிந்தது. நேற்று சென்னிமலை ஒன்றியம் வரப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழியிடம் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர். அவர்கள் பெருந்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
விஜயமங்கலம் விண்டெக்ஸ் நகரை சார்ந்தவர் பாப்பாத்தி (57), இவர் தனியாக வசித்து வருகிறார். சாமிநாதனும் பாப்பாத்தியும் பல வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளனர். கடந்த 30 ம் தேதி மதியம் பாப்பாத்தி வீட்டிற்கு சாமிநாதன் வந்தார். அவர் மழையில் நனைந்து நடுக்கத்துடன் வந்திருக்கிறார். அந்த நிலையிலும் உல்லாசமாக இருக்க பாப்பாத்தி வற்புறுத்தி உள்ளார். சாமிநாதன் மறுத்தும் அவருடன் பாப்பாத்தி வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது சாமிநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளது. இதனால், பயந்து போன பாப்பாத்தி சென்னிமலை அருகே வாய்பாடியில் வசிக்கும் தன் மகன் கிருஷ்ணனுக்கும்(34), சென்னிமலை ஓட்டப்பாறை பகுதியில் குடியிருக்கும் சம்பந்தி ஈஸ்வரியிடமும் இது குறித்து தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த இருவரும் பாப்பாத்தியுடன் சேர்ந்து சாமிநாதன் சடலத்தை சமையலறையில் மறைத்து வைத்துள்ளனர். பின்னர், மூன்று பேரும் சேர்ந்து கிருஷ்ணனுக்கு சொந்தமான காரில் சாமிநாதன் சடலத்தை சிப்காட் பகுதியில் உள்ள ஓடைக்காட்டூர் பகுதியில் போட்டுள்ளனர். பாப்பாத்தி வீட்டில் நின்றிருந்த சாமிநாதனின் மொபட்டை பெருந்துறை பஸ் நிலையத்தில் விட்டுள்ளனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
பாப்பாத்தி, அவரது மகன் கிருஷ்ணன், சம்பந்தி ஈஸ்வரி ஆகிய மூவரையும் கைது செய்த பெருந்துறை போலீசார் 304/II (கொலை செய்யும் நோக்கம் இல்லாமல், மரணம் ஏற்படும் என தெரிந்தே அந்த செயலை செய்ய தூண்டுவது), 201 (தடயங்களை மறைத்தல்) என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பெருந்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை அருகே பரபரப்பு: கட்டாய உறவால் 70 வயது முதியவர் சாவு: கள்ளக்காதலி உட்பட 3 பேர் கைது
Reviewed by Beauty tips.tk
on
December 06, 2017
Rating:
No comments: