முக பருக்களை வேறுடன் அழிக்க உதவும் திருநீற்றுப் பச்சிலை பற்றி தெரியுமா?(Do you know the trumpet leaflet that helps to erase facial burns?)




நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடக்கும், விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது.

திருநீற்றுப் பச்சிலை தைலத்தை தனியாகவே, எண்ணெயில் சேர்த்து தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.

பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித்.பாவிப்பதால்    பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பருக்கள் பிரச்சனைக்கு இந்த மூலிகை மருந்தாக பயன்படுகிறது. இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும்.

சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி.

இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன. இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும்.

சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.

ஆண்டி ஆக்ஸிடெண்ட் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது.
முக பருக்களை வேறுடன் அழிக்க உதவும் திருநீற்றுப் பச்சிலை பற்றி தெரியுமா?(Do you know the trumpet leaflet that helps to erase facial burns?) முக பருக்களை வேறுடன் அழிக்க உதவும் திருநீற்றுப் பச்சிலை பற்றி தெரியுமா?(Do you know the trumpet leaflet that helps to erase facial burns?) Reviewed by Beauty tips.tk on November 17, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.