வல்-துமார்னில் Choisy-le-Roi - என்ற இடத்தில் மாபெரும் தீவிபத்து - பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர்





நேற்று வல்-துமார்னில் உள்ள Choisy-le-Roi நகரில் மாபெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயை அணைப்பதற்கு 120 இற்கும் மேற்பட்ட தீயணைப்பப் படையினர், பத்து மணித்தியாலங்களிற்கு மேல் போராடி உள்ளனர்.


நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்தில், அதிகாலை நான்கு மணியளவில் பற்றிக் கொண்ட தீ, மிக வரைவாகப் பரவி உள்ளது. Choisy-le-Roi, RER நிலையத்திற்கு அருகாமையில் உள்ள, place François-Mitterrand இலிருக்கும் நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்திலேயே தீ ஆரம்பித்துள்ளது.

பக்கத்தில் இருக்கும் கட்டடம், வாகனத் தரிப்பிடத்திற்கு மேலுள்ள உள்ள கட்டடம் என மிக விரைவாகத் தீ பரவி உள்ளது.


குடியிருப்புக் கட்டடம், மற்றும் நிலக்கீழ் வாகனத் தரிப்பிடம் ஆகியவற்றில் ஏற்பட்ட தீ விபத்து, குற்றச் செயல்களின் மூலமே ஏற்பட்டுள்ளது எனக் காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.


இரண்டு அடுக்குகளாக 2.000 சதுர மீற்றர் பரப்பளவுள்ள நிலக்கீழ் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைவது, தீயணைப்புப் படையினர்க்குப் பெரும் சாவாலாகவே அமைந்திருந்துள்ளது.

250 இற்கும் மேற்பட்டவர்கள், தீ பரவிய குடியிருப்பில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மாநகரசபையும் செஞ்சிலுவைச்சங்கமும் இவர்களிற்கான தங்கும் இட வசதி ஒழுங்கு செய்துள்ளனர். இவர்கள் மீளக் குடியேற எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாது என்று, மாநகரசபை முதல்வர் தெரிவித்துள்ளார்
வல்-துமார்னில் Choisy-le-Roi - என்ற இடத்தில் மாபெரும் தீவிபத்து - பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர் வல்-துமார்னில் Choisy-le-Roi - என்ற இடத்தில் மாபெரும் தீவிபத்து - பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர் Reviewed by Beauty tips.tk on January 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.