குஜராத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை மகன் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
குஜராத்தில் மகனே உடல்நிலை சரியில்லாத தாயை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் நத்வானி என்பவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பெண் பல நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகின. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சந்தீப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, ஜெயாஸ்ரீயை சந்தீப் மாடிக்கு இழுத்து சென்றதும், பின்பு சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்ததும். தன் வீட்டுக்குள் சென்றதும் தெரிந்தது. இதனையடுத்து சந்தீப்தான் தாயை கொலை செய்துள்ளார் என்று போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை மகன் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Reviewed by Beauty tips.tk
on
January 05, 2018
Rating:
No comments: