கேரளா விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியம் செய்துள்ளது – புகைப்படம் உள்ளே

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் ஒரு ஒப்பற்ற கலைஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதனையும் தாண்டி ஒரு நல்ல மனிதராகவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவ்வப்போது நல்ல நாட்கள் மற்றும் தன் பிறந்த நாளில் நற்பணிகளை தானே செய்து வருகிறார். அதற்கென தமிழகம் தான் வைத்துள்ள ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி வைத்து ரசிகர்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.

அவருக்கு தமிகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் கேரளாவில் அவருக்கு சற்று ரசிகர்கள் அதிகம். அங்குள்ள ரசிகர்கள் விஜய் பெயரில் எப்பதும் நற்பணிகளை செய்வது வழக்கம்.

புத்தாண்டு துவங்கி உள்ள நிலையில் கேரளா விஜய் ரசிகர்கள் செய்து செயல் அனைவரையும் ஆச்சரியம் செய்துள்ளது. புத்தாண்டு முன்னிட்டு கேரளா அரசு மருத்துவமனைக்கு வீல் சேர்கள் வழங்கி உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

ரசிகர்கள் பலர் பேனர் மற்றும் கட் அவுட் வைத்து யாருக்கும் பலன் இல்லாமல் செய்து வரும் வேளையில் கேரள விஜய் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயல் பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


கேரளா விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியம் செய்துள்ளது – புகைப்படம் உள்ளே கேரளா விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியம் செய்துள்ளது – புகைப்படம் உள்ளே Reviewed by Beauty tips.tk on January 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.