கார சாரமான சிக்கன் வறுவல்



தேவையான பொருள்கள்

சிக்கன் - அரை  கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 3  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 1
அரைத்த வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை: 


  •  சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்
  •  பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு,  அரைத்த வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு மற்றும்  2  ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து  நன்கு  பிரட்டி  1   மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.  
  • பின்பு  கடாயை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். 
  • பிறகு அதில் 1 ஸ்பூன்  மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • அதனுடன்   ஊற வைத்துள்ள சிக்கனை கடாயில் போட்டு  10 நிமிடம் நன்குவதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கடாயை  மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். 
  • சிக்கன்  நன்கு வெந்து தண்ணீர்  சுண்டியதும்  கொத்தமல்லி தூவி இறக்கவும்.


கார சாரமான சிக்கன் வறுவல் கார சாரமான சிக்கன் வறுவல் Reviewed by Beauty tips.tk on December 01, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.