எந்நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார்.
இதற்கு, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐநா சபையும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. வடகொரியாவின் அச்சுருத்தலை சமாளிப்பதற்காக, ஜப்பான், தென்கொரியாவுக்கு கடந்த ஆகஸ்டு முதல் அமெரிக்காவின் விமாப்படை, கடற்படை மற்றும் ராணுவம் தொடர் போர் பயிற்சிகளை அளித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டால், எந்நேரமும் அணு ஆயுத போர் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டால், எந்நேரமும் அணு ஆயுத போர் வெடிக்கலாம் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தினரின் குடும்பங்கள் அங்கு வசிப்பது பாதுகாப்பனது அல்ல என்று குடியரசு கட்சியின் செனட்டர் கிரஹாம் கூறியுள்ளார்.
இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வலிவகுக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாகவே அணு அயுத போர் வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
எந்நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம் : வடகொரியா கடும் எச்சரிக்கை..!
Reviewed by Beauty tips.tk
on
December 05, 2017
Rating:
No comments: