BiggBoss நிகழ்ச்சி மூலம்யாருக்கு லாபமோ இல்லை. ஆனால் அந்நிகழ்ச்சி மூலம் முன்னணி நடிகைகளுக்கு இணையான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஓவியா.
நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் நிறைய விளம்பரங்கள், படங்கள் என கமிட்டானார். சமீபத்தில் கூட காஞ்சனா 3 படத்தில் ஓவியா நாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இப்படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால் படத்தில் இருந்து ஓவியா விலகியிருக்கிறாராம்.
இதுகுறித்து படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, ஓவியாவோ, காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்புகள் துவங்க தாமதம் ஆனதாலேயே, விலகுவதாக விளக்கம் அளித்துள்ளாராம். அதோடு தான் வாங்கிய முன்பணத்தையும், வட்டியுடன் நடிகை ஓவியா திருப்பி கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை ஓவியா மீது எழும்பிய பிரச்சனை புகார் கொடுத்துள்ள படக்குழு
Reviewed by Beauty tips.tk
on
November 30, 2017
Rating:

No comments: