மெர்சல் படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.மேலும், படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் 19ஆம் தேதி துவங்குகிறது. படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத்தெரிகிறது. படத்திற்கான டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை.இந்நிலையில் இந்த படத்தின் முடிவிற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் கை கோர்க்க உள்ளதாகத் தெரிகிறது. அட்லீ இயக்கிய மூன்று படங்களில் இரண்டு விஜய்யை வைத்து இயக்கியதாகும். தெறி மற்றும் மெர்சல் என இயக்கிய இரண்டு படங்களும் ஹிட் ஆனது.
மேலும், படத்திற்கான தலைப்பும் ‘ஆளப்போறான் தமிழன்’ எனவும் டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்-62 படத்திற்கு இன்னும் பெயர் வைக்காத நிலையில் விஜய்-63க்கு டைட்டில் வைத்துள்ளதாக வெளியான செய்தியால் விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யை சந்தித்த அட்லீ ! வெளியானது படத்தின் தலைப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம் ?
Reviewed by Beauty tips.tk
on
November 30, 2017
Rating:
Reviewed by Beauty tips.tk
on
November 30, 2017
Rating:
No comments: