2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ள யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் துவாரகனுக்கு, தமிழ்வின் இணையத்தளம் மிகுந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
மேலும் P.மைக்கல் இயந்திரவியல் தொழினுட்பத் துறையில் அகில இலங்கை ரீதியில் பத்தாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தயாளன் தயாநிதி உயிரியல் விஞ்ஞானத் துறையில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம் 2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு!
Reviewed by Beauty tips.tk
on
December 27, 2017
Rating:
No comments: